காயம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ரெனிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ரொஜர் பெடரர், நாளை பேர்த்தில் நடைபெறவுள்ள ஹொப்மன் வெற்றிக்கிண்ண தொடரில் விளையாடவுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதி போட்டியில் மிலோஸ் ரயனிக்கை எதிர்த்து விளையாடிய போது உபாதைக்கு உள்ளானார்.
இந்தநிலையில், நாளைய போட்டியில் சுவஸ்சலாந்து அணி சார்பாக இவர் பென்சிக்குடன் இணைந்து விளையாடவுள்ளார்.
35 வயதான ரொஜர் பெடரர் டெனிஸ் போட்டிகளில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.