பூட்டிய வீட்டில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

180 0

ஹொரண – வேகட வீதியின் பெரண்டிய விகாரைக்கு அருகில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 86 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களான தம்பதியினரின் குறித்த வீட்டில் சேவையாற்றி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தம்பதியினர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த வீட்டில் கடமையாற்றிய உயிரிழந்த பெண் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் குறித்த வீட்டில் தனியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணிற்கு கொவிட் தொற்று உள்ளதா என உறுதி செய்வதற்காக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.