எதிர்காலத்தில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – பத்மா குணரட்ண

196 0

ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஒக்சிசன் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஆபத்தான நிலைமை உருவாவதை தடுப்பதற்காக பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா வைரசினால் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் கடுமையா பாதிக்கப்பட்ட கொரோனாநோயாளிகள் அதிகரிப்பதால் புதிய நோயளிகளிற்காக இடமில்லாத நிலை உருவாகிவருகின்றது என தெரிவித்துள்ள பத்மா குணரட்ண கொரோனா நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பெருமளவு ஒக்சிசன் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.