அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வாகனப் பேரணி

216 0

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்டமூலத்தை நீக்க கோரியும், எதிர்வரும் திங்கட்கிழமை (09), யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடத்தப்படவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே,  சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை, யாழ். வீரசிங்கம் மண்டபம் முன்பாக இருந்து ஆரம்பமாகும் இந்த வாகனப் பேரணி, யாழ். மாவட்டச் செயலகம் வரை சென்று நிறைவடையவுள்ளது என்றார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த் பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்கி, பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேசிய ரீதியில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில், வடமராட்சி – பருத்தித்துறை பஸ் நிலைத்துக்கு முன்னால், திங்கட்கிழமை (09) காலை 10:30 மணிக்கு, போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமராட்சி ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.