சென்னையில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

191 0

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி முதல் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர   சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு   கொரோனா தடுப்பூசி   செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி முதல் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இதுவரை நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 2 ஆயிரத்து 477 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 610 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் என மொத்தம் 3 ஆயிரத்து 87 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.