யாழ் மாவட்டத்தில் யுத்தம் காரணமாகத்தான் வாக்காளர்கள் குறைந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலே அவர் வாக்காளர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதும் தற்பொழுது அரசாங்கத்தினுடைய முடிவாக தற்பொழுது பதிவில் இருக்கின்ற கணிப்பீட்டின்படி ஆறு உறுப்பினர்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
1981 ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது காலி மாவட்டமும் யாழ்ப்பாண மாவட்டமும் கிட்டதட்ட ஒரே வாக்காளர்களைக் கொண்டிருந்தது. அதாவது காலி மாவட்டத்தில் 814531 வாக்காளர்கள் இருந்துள்ளார்கள்.
அதேநேரம் யாழ் மாவட்டத்தில் 830557 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2001 ம் ஆண்டு 990437 வாக்காளர்கள் காலி மாவட்டத்திலும் , 617884 வாக்காளர்கள் யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றனர்.
இவ்வாறு யாழ் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு யுத்தம் காரணமாக இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.