வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைமுறையில் உள்ள பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ள ஆதரவிற்கு நன்றியை தெரிவிப்பதுடன், தடுப்பூசியை பெற்றுகொள்ள அனைவரும் முன்வர வேண்டுமென வைத்தியசாலை பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்ட மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவது, தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க இன்றியமையாததாகும்.
சுகாதார துறையினரது அயராத முயற்சியுடன் மக்களினது அர்ப்பணிப்பான ஒத்துழைப்புமே, கடுமையான இந் நிலைமையிலிருந்து மீள முடியும் என தெரிவித்துள்ளனர்.