கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.