சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும், மலையக அரசியல்வாதிகளும் இரட்டைவேடம் போடுகிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இடை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
;பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணித்த 16 வயது சிறுமியின் விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.