அடுத்தவாரம் மேலும் 40 இலட்சம் சைனோபாஃம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் இரண்டாம் வாரம் நிறைவடைவதற்குள் நாட்டில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி செலுத்தி நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.