புல்லுவெட்டியை வாளாக மாற்றியவர் கைது

222 0

புல்லு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் புல்லு வெட்டியை வாளாக உருமாற்றம் செய்து அதனை மறைத்து எடுத்து சென்ற இளைஞன் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், புல்லு வெட்டியின் கை பிடியை மாற்றம் செய்து, புல்லு வெட்டியின் இரு பக்கங்களையும் கூர்மையாக்கி அதனை வாளாக உருமாற்றம் செய்துள்ளார்.

குறித்த இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்