புதிய கல்விப் பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றார்

150 0

கிழக்கு மாகாண புதிய கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், நேற்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து பட்டிருப்பு கல்வி வலய உத்தியோகத்தர்களால் பணிப்பாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

இந்த வைபவத்தில் பட்டிருப்பு வலக் கல்வியலுவலக நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் உட்பட வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.