ரணில் விடுத்த கோரிக்கையை ஏற்ற சுகாதார அமைச்சர்!

177 0

கொவிட் பரவல் சம்மந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.

இவ்வாறான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைப்பதன் ஊடாக, நாட்டின் கொவிட் நிலைமைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இதனை வரவேற்ற சுகாதார அமைச்சர், கொவிட் சம்மந்தமான கேள்விகளுக்கு பதிலளிப்பதைவிட இது சிறந்ததாக அமையும் என்று தெரிவித்தார்.