வவுனியாவில் 10 சிறைச்சாலை கைதிகள் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதில், நேரியகுளம் பகுதியில் பதினைந்து பேருக்கும், சலனிகம பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், விநாயகபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் மூவருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாம்பல் தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், மருதமடு பகுதியில் ஒருவருக்கும், மாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைத்தியசாலை விடுதியில் ஒருவருக்கும், உடையார்கட்டு தெற்கு பகுதியில் இருவருக்கும், பட்டக்காடு பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் ஒருவருக்கும், ஒமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், மாகா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் என 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.