வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்!

194 0

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக சேவையாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளைய தினமும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார பணிக்குழாமினருக்கு கொவிட் விசேட விடுமுறை முறைமையை தொடர்ந்து செயற்படுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றிணை அனுப்பியுள்ளனர்.

இந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிடத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.