காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, யால கல்கே சரணாலய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான்களை வேட்டையாடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சரணாலயத்திற்குள் நுழைந்து காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பின்போது 130 கிலோகிராம் சம்பார் மான்களின் இறைச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.