வத்தளை பிரதேசத்தில் இன்றைய தினம் 24 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர் குழாய்கள் பொருத்துதல் மற்றும் அவற்றை நீர் மார்க்கத்துடன் இணைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (03) முற்பகல் 10 மணிமுதல் நாளை முற்பகல் 10 மணிவரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வத்தளை – நீர்கொழும்பு வீதியின் ஒரு பகுதியிலும் மாபொலயில் ஒரு பகுதியிலும் நீர் விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெலிகந்தமுல்ல, ஹெந்தல வீதியின் நாயகந்த சந்தி முதல் உள்ள அனைத்து உபவீதிகள், அல்விஸ் நகர், மருதானை வீதி, புவக்வத்தை வீதி, கலஹதுவ, கெரவலபிட்டிய ஆகிய இடங்களிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.