புதிய தூதுவராக ராகேஸ் நடராஜ் பதவியேற்பு

164 0

யாழ்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய  தூதுவராக ராகேஸ் நடராஜ் நேற்றைய தினம் (02) தனது அலுவலகத்தில் பதவியேற்றார்.

இதுவரை காலமும்  துணைத் தூதுவராக இருந்த பாலச்சந்திரன் பதவியுயர்வு பெற்று
வெளிநாடொன்றிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டதால் இப்புதிய நியமனம்
இடம்பெற்றது.

ராகேஸ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை  மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் இதற்கு முன்னர் கண்டி- இந்தியா உதவி உயர்தானியாராக பணிபுரிந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.