கொழும்பில் முதல் டோஸ் ஏற்றாதவர்களின் கவனத்துக்கு

178 0

அஸ்ட்ராஸெனகா மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்கும் வரை நகரவாசிகளுக்கு முதல் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்போவதில்லை என்று கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, இன்று தெரிவித்தார்.

சினோஃபார்ம் மற்றும் அஸ்ட்ராஸெனகாவின் இரண்டாவது டோஸ், சுகததாச வெளிப்புற மைதானம், பி.டி. சிறிசேன மைதானம் மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆகியவற்றில் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், சினோஃபார்மின் இரண்டாவது டோஸ், கொழும்பு மாநகர சபை தடுப்பூசித் தளங்களான கேம்ப்பெல் பார்க், கிச்சிலன் ரிசப்ஷன் மண்டபம் -கொம்பனித்தெரு, கொழும்பு மத்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில்  வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் 88,000 தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.