மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 62 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் சுமார் 184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் குறித்த பிரதேசத்தில் 62 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பேசாலை, தாழ்வுபாடு,சாவற்கட்டு போன்ற கிராமங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.