சிறந்த ஊடக கலாசாரம் ஒன்றை உருவாக்குதல், மற்றும் ஊடக உரிமையை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடகங்களுக்கான ஒழுக்க கோவை சட்ட மூலத்திற்கு, மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் கால எல்லை, ஜனவரி 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால எல்லை இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் ஒருமாத காலத்திற்கு இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக, மதத் தலைவர்கள், ஊடக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் அமுக்கக் குழுக்களின் யோசனைகளை எதிர்பார்ப்பதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெறப்படுகின்ற கருத்துக்கள்; சுயாதீனமான புத்திஜீவிகள் குழுவொன்றினால் ஆராயப்பட்டு சட்டமூலம்; உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.