நாட்டில் டெல்டா கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் மிக ஆபத்தான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என பேராசிரியர் மலிக் பீரிஸ் எச்சரித்துள்ளார்.
புதிய டெல்டா வைரஸ் இந்தியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் சில வாரங்களில் இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்காவிட்டால் தனது பொறுப்பை புறக்கணிப்பதாகத் தெரிவித்த அவர் குறித்த , புதிய டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராக இரண்டு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தைத் துரிதப்படுத்தியதற்காக அரசாங்கம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.