சர்வதேசத்தின் பங்களிப்புக்கான காலம் நெருங்கியுள்ளது – மாவை

283 0

nallur_building_open_017தமிழ் மக்களை அரசியல் தீர்வு முயற்சிக்கு வலியுறுத்திய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம், தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் நெருங்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையில் இன்று இடம்பெற்ற வருட இறுதி ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெறும் பொருட்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது என்பது குறித்து ஆதங்கங்களும் கவலைகளும் உண்டு.

தமிழ் மக்களை சம தரப்பாக ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண முயலவேண்டும்.

இதனையே சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது

விடுதலைப்புலிகளோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இராஜதந்திர அணுகுமுறை காணப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்ற தரப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கும் அத்தகைய குற்றச்சாட்டை சுமத்த இடமளிக்க முடியாது.

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக சர்வதேச சமூகத்தோடு இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த முயற்சி நீதியை நிலைநாட்டாதபட்சத்தில்; இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களை ஏமாற்றியது என்ற செய்தியினை சர்வதேச சமூகத்துக்கு அறிவிக்கப்படும்.

அதுவரை வடக்கு கிழக்கு இணைந்த வகையில் பல்லின சமூகங்களை அங்கீரிக்கின்ற அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு பெறும் மக்களின் ஆணையை மதித்து நடப்பதாக மாலை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.