படகுகளை விடுவிக்க கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

398 0

sea_ramashதமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்கியதாக கூறி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ராமேஸ்வர மீனவ சங்கத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 51 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

எனினும், தமிழக மீனவர்ளின்; படகுகள் அரசுடமையாக்கப்பட்டதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிராக தமிழக மீனவர்கள் மாநில அளவிலான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை வசமுள்ள படகுகளை மீட்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்காக புதிய படகுகளை இந்திய மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்கள் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.