அரசாங்கஊழியர்கள் வேலைக்கு திரும்பவேண்டும் என அரசாங்கம்உத்தரவிட்டுள்ளதை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார கடுமையாக சாடியுள்ளார்.
அரசாங்கம் தற்போது வாழ்வு அல்லது சாவு விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அனைத்துஅரசாங்க பணியாளர்களும் வேலைக்கு திரும்பவேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு காரணமாக கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம் ஏனென்றால் கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் 132 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் அரசாங்கம் அனைத்து அரசஊழியர்களையும் வேலைக்கு அழைத்துள்ளதுஎன குறிப்பிட்டுள்ள அவர் கர்ப்பிணிகள் வேலைக்கு வரவேண்டியதில்லை என தெரிவிக்கும் சுற்றுநிரூபம் இரத்துச்செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடையாத நிலையில் இது இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் வாழ்வு அல்லது சாவு விளையாட்டினை விளையாடுகின்றது என்பதை இது புலப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளிற்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
தம்மிக பாணிமற்றும் ஆற்றிற்குள் பானையை வீசுதல் போன்ற உள்நாட்டு மருத்துவங்களிற்கு இடமளித்து தடுப்பூசியை பெறுவதை அரசாங்கம் தாமதப்படுத்தியது என குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் உயிரிழப்புகளிற்கு காரணமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.