ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவால் – ஜேர்மன் சான்சலர்

501 0

1438533465shutterstock_153049277_0-900x450ஐ. எஸ். அமைப்பு தமது நாட்டுக்கு பாரிய சவாலாக உள்ளதாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கல் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் பேர்லினில் இடம்பெற்ற தாக்குதலை சுட்டிக்காட்டியுள்ள அவர், 2016ஆம் ஆண்டு கடுமையான சோதனைமிகுந்த காலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஜேர்மனியால் இதிலிருந்து முன்னேர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எமது தொழில் எமது வாழ்க்கை என்று நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையில், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தீவிரவாதிகள் தீர்மானிக்க முடியாது என்று ஏஞ்சலா மார்க்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பேர்லினின் நத்தார்கால சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.