கிளிநொச்சியில் வீட்டில் நித்திரையிலிருந்தத இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் நேற்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.