டிசம்பர் முதலாம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற வீரர்கள், சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம்; இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை 30 அதிகாரிகள் மற்றும் 8 ஆயிரத்து 250 பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் இராணுவத்தில் சரணடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பொது மன்னிப்பு கால எல்லை மீண்டும் நீடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ சட்டத்திற்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.