கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் தமது சொந்த நாடுக்கு திரும்பவுள்ளனர்.
தமது சேவைக் காலம் நிறைவடைந்துள்ளதைடுத்தே இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது;.
இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், இந்திய உயர்ஸ்தானிராலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்தார்.
இதேவேளை, சீன மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூத்த கேணல் லி செங்லிங், சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றியாற்றினார்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்றுப் பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை தனித்தனியாகச் சந்தித்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றுக் கொண்டனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.