ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பதவி வகித்துவரும் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றார்.
2007ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச்செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி பதவியேற்ற இவர், நாளை முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.