அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று தீர்மானமொன்று எடுக்கப்பட்டால், 24 மணித்தியாலயத்துக்குள் வெளியேற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே அனைவரும் இருப்பார்கள.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு வெளியேறிச் செல்வாராயின், அவர் பின்னே நாம் செல்ல மாட்டோம்.
எதிர்காலத்தில் வரும் புதிய தலைவருடனேயே நாம் இருப்போம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கு இருக்கின்றதோ அங்கேயே நாம் இருப்போம்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க நாம் அரசாங்கத்தில் இணையவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.