இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை 2017 ஜனவரி 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை குறித்து கடந்த வருடம் பேசப்பட்டபோதும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
இந்த உடன்படிக்கையினால் நாட்டுக்கு நன்மைகள் இல்லை என்று இலங்கையில் கூறப்பட்டு வருகிறது.
எனினும், இந்த உடன்படிக்கையினால் இரு நாடுகளுக்கும் நன்மையிருப்பதாக இந்தியா கூறிவருகிறது.
இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பருக்குள் உடன்படிக்கையை கைச்சாத்திடவேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியபோதும், இரண்டு தரப்புகளும் திருப்பதியடையும் வரை காலக்கெடு தேவையில்லை என்று இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமது கொழும்பு விஜயத்தின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.