பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நீதி விசாரணைகள் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில், தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் சில முக்கியமான முன்னேற்றகரமான விடயங்கள் நடைப்பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.