காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்து அரசை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடி கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.
எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாக போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கோ அரச தரப்பிடம் முற்படுத்துவதற்கோ யாரும் முயற்சி செய்ய வேண்டாம். என்றனர்.