இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரடியான பதிலை வழங்கவில்லை.
தமிழ் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பது குறித்த தனது பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும் என இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் இந்திய நாடாளுமன்றத்திற்கான எழுத்துமூல பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
பல்லின பல்மத சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பேணுவதற்கான முயற்சிகளிற்கும் இந்தியா ஆதரவளித்து வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்குமாறும் தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் சமத்துவம் பாதுகாப்பு ஐக்கியத்துடன் வாழக்கூடிய பல்லின பல்மத பல்மொழி சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளிற்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல் உட்பட பல கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில் சமத்துவம் நீதிஅமைதி மற்றும் கௌரவத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் பொறுப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பது உட்பட அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வில் ஈடுபடுவது இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரடியான பதிலை வழங்கவில்லை.
தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிசாலைகளிற்கு தீர்வை காண்பது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும்,தமிழ்சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் மனித உரிமைகள் பாதுகாக்க படுவதை உறுதி செய்வதற்கான சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.