மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக போலி ஆவணங்களை சமர்பித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திகன பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கி கணக்குகளில் 28 இலட்சம் ரூபா பணம் இருப்பதாக வங்கி முகாமையாளரின் கையொப்பத்துடன் கூடிய வகையில் குறித்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
24 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக குறித்த நபர் இவ்வாறு போலி ஆவணங்களை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தரமுல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.