புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது

311 0

31031பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான நத்தார் மரத்தை மக்கள் பார்வைக்காக நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நாட்டில் பலர் ஏழ்மையில் தவிக்கின்றனர்.

இதற்கு நாம் ஒரு போதும் இடம்கொடுக்க கூடாது. எமது நாட்டை நாம் அபிவிருத்தி செய்து, ஏழ்மையில் உள்ளவர்களின் சிறந்த வாழ்க்கைக்கான சூழல் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.