இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது- மஹிந்த அமரவீர

288 0

mahinda-amaraweera1இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளையும் கடற்தொழில் உபகரணங்களையும் கையளிக்க முடியாது.

தற்போது இந்திய கடற்றொழிலாளர்களின் 122 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டது என்றும் அவை அரசு உடமையாக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்தால் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.