இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், நோயாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து 6000 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், இலங்கையில் 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த கண் வில்லைகள் தனியார் வைத்தியசாலைகளிலேயே அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் 10 ஆயிரம் ரூபாவிற்கே இந்த கண் வில்லைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசிய மருத்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு ஏற்க, சத்திர சிகிச்சை உபகரணங்களின் விலைகளையும் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் முதல் கட்டமாக கண் வில்லைகளின் விலைகளை குறைக்க திட்டமிடப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்