நாட்டிலுள்ள போக்குவரத்து சாலைகளில் வடக்கு மாகாண போக்குவரத்து சாலை முதலாம் இடத்தில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதான பிராந்திய முகாமையாளார் உபாலி கிரிபத்துடுவ தெரிவித்துள்ளார்.
காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச் சாலையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட பொன்விழாவில் பிரதான உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண போக்குவரத்து சபையானது தனது சேமிப்பில் 10 போடி ரூபாவை சேமித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் அடுத்த வருடம் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு ஆயிரத்து இருநூற்று ஐம்பது பேரூந்துகள் புதிதாக வரவுள்ள நிலையில், அவற்றில் 60 பேரூந்துகள் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பேரூந்துகளில் 5 பேரூந்துகளை காரைநகர் சாலைக்கு ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
காரைநகர் சாலைகளின் புனரமைப்புக்கு 1 மில்லியன் ரூபா அமைச்சிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதென்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் குறித்த 60 புதிய பேரூந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதான பிராந்திய முகாமையாளார் உபாலி கிரிபத்துடுவ குறிப்பிட்டார்.