வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியினூடாக தீவகம் அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தீவகம் அனலைதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாயஅமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால், 5 இலட்சம் ரூபா பெறுமதியான 26 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆடுகளின் போசனைக்கான கனியுப்புப் பொதியும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
நல்லின ஆடுகளை வழங்கும் குறித்த நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.