விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் –  நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க

303 0

nishantha-sri-warnasinghe-720x480விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்கான விசேட சடடமூலம் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனை நாங்கள் நிராகரிக்கவில்லை. எனினும் குறைபாடுகள் காணப்படுமாயின், மாற்றங்கள் இருக்கமாயின், அது தொடர்பில் பேசி தீர்மானிக்க முடியும். அதனைவிடுத்து அமைச்சரவையில் இது தொடர்பில் தீர்மானித்து சட்டமூலத்தை வெளியிட்டதன் பின்னர் அதற்கு இணங்கமுடியாது என பின்னர் தெரிவிக்கின்றனர்.

நாடு பொருளாதாரத்தில் பிரச்சினையை எதிர்நோக்கும் நிலையில் குறித்த யோசனை அவசியமானது இதன்மூலம் 4 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதார அபிவிருத்தியை 10வீத கொண்டு வரமுடியும் என்ற எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டமூல யோசனை அமைச்சரவையில் உரியமுறையில் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும். பிரதமர் இதனை முன்னெடுக்கவேண்டும். என்று நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க கேட்டுள்ளார்.