இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய மாகாண அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரர் எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை வகித்திருப்பார் எனவும் விஜயகலா மகேஸ்வரன் நேற்றுமுன்தினம் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.