பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி தீர்மானம்

174 0

அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண வைபவங்கள் இடம்பெறுவதாக தொடர்ந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்தால் புதிதாக திருமண கொத்தணி ஒன்று உருவாகக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.