பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது

190 0

கொவிட்19 காரணமாக பெற்றோர்களும் சிறுவர்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மலையகத்தில் பாடசாலை கல்வி முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொவிட் காலத்தில் சிறுவர்கள் தொழில் புரிவதற்காக வேறு பகுதிகளிற்கு செல்வது அதிகரித்துள்ளது என கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றோம்.

வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிவதற்காக அழைத்துவரப்பட்டவேளை அவர் சிறுமி என்பதை சமீபத்தைய சம்பவம் புலப்படுத்தியுள்ளது.

பிரதேச பரிசோதனை அறிக்கைகள் நீண்டகாலம் பாலியல்துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த விடயத்தை இழுத்தடிப்பதற்கு அனுமதிக்ககூடாது விசாரணைகள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் அவசியம்.

விசாரணைகளை பொலிஸார் வேண்டுமென்றே தாமதிப்பார்கள் என்ற கரிசனை காணப்படுகின்றது. இந்த விவகாரத்தில் காணப்படும் தாமமும் செயற்பாடின்மையும் ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கை உண்மையான ஆர்வத்தை கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

அவர் பணியாற்றிய வீட்டின் அந்தஸ்த்து விசாரணைகளிற்கு தடையாக விளங்ககூடாது விசாரணைகளை பாதிக்ககூடாது.

அனைத்த குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும். சிறுமியொருவரை வேலைக்கு அழைத்துவந்தவரும் பணிப்பெண்ணாக வேலைக்குஅமர்த்திய தரகரும் நாட்டின் சட்டங்களை மீறியுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களிற்கு குறிப்பாக டயகம சிறுமியின் தாய்க்கு விசாரணைக்கு உதவுவதற்கான அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கானசட்ட உதவி அவசியம்.

முகவரை கண்டுபிடிப்பது பல விடயங்கள் வெளிவருவதற்கு உதவும். இந்த சம்பவம் குறித்து தங்களிற்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தவேண்டிய கடப்பாடு ரிசாத் பதியுதீனின் குடும்பத்திற்கு உள்ளது.
சவுதிஅரேபியாவில் கொல்லப்பட்ட ரிசானாவிற்காக நாங்கள் அனைவரும் போராடினோம்.

இதுபோன்று இந்த சிறுமிக்காக நாங்கள் குரல்கொடுக்கின்றோம்- இவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய எங்கள் பிள்ளைகள்.