‘ நிறம் மாறினாலும் லிட்ரோ கிடைக்கும்’

172 0

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு கையிருப்பு தங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தேஷர ஜயசிங்க, சந்தையில் காணப்படும் எந்தவொரு நிறத்தினாலான வெற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றைத் தம்மால் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ் நிறுவனம் சமையல் எரிவாயு இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுத்த திடீர் தீர்மானத்தையடுத்தே லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இவ்விடயத்தை அறிவித்துள்ளது.

சிலிண்டர்களின் தேவை அதிகரித்தால் அதை நிவர்த்திப்பதற்கான இயலுமை தமது நிறுவனத்துக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.