பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்வது, இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை பாரிய நெருக்கடிக்கு தள்ளிவிட வழிவகுக்கும்.
அதனால் அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துவதற்கு அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டமூலத்தை நிறைவேற்ற முற்பட்டால், நாட்டு மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறோம் என்றார்.