பாம்பன் கடலில் டால்பின்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு

193 0

பாம்பன் முதல் மண்டபத்துக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் டால்பின்கள் அதிகமாக உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரோடு பாலத்தின் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று பகலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் துள்ளி குதித்தன.
அந்த பகுதியில் மீன்பிடி படகுகள் ஏதும் வராததால் டால்பின்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடின. மிக அருகில் டால்பின்கள் துள்ளிக்குதித்ததை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இதுபற்றி மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் கூறியதாவது:- பாம்பன் முதல் மண்டபத்துக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் டால்பின்கள் அதிகமாக உள்ளன. டால்பின்களின் இனப்பெருக்கமும் அதிகமாகி வருவதை பார்க்க முடிகின்றது. பாம்பன், மண்டபம் கடல் பகுதியில் ரோந்து செல்லும் போது பெரிய டால்பின்களுடன் பல குட்டிகளும் நீந்தியபடி செல்வதை பலமுறை பார்த்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.