சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

401 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக பல இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில்> தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிய  சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள்  10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததுடன்> தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப்  பெரும்பங்காற்றினார்.

நெருக்கடியான காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய காரணத்திற்காகப் பல ஆண்டுகள் இந்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தமிழீழம்> தமிழகம் மட்டுமன்றி அவர் வாழ்ந்த புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் காத்திரமான பணிகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக> வெளித்தெரியா அளப்பரிய பங்காற்றிய இவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்> நண்பர்களின்  துயரில்  நாமும்  பங்கெடுத்துக்கொள்வதுடன்> காலத்தின் தேவையுணர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு  அளப்பரிய பங்காற்றிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்|| என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.