பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற 74 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

222 0

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 74 பேர் திருப்பி அனுப்பப் பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத் தில் மேலும் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 50,184 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்வரும், வெளி யேறும் 13 நுழைவாயில்களில் 6207, பரிசோதிக்கப்பட்டனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற 74 நபர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டனர்.

கொழும்பு நரத்திற்கு அண்மித்த பகுதியில் பலர் முகக் கவசமின்றி பொதுவெளியில் நடமாடுவதாகத் தெரிய வந்துள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு மேலும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

குறித்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் நீதிமன்றத் தால் விதிக்கப்படும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரி வித்துள்ளார்.

அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடர் பான நடவடிக்கை கள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்று அஜித் ரோகண தெரி வித்துள்ளார்.